தொடுப்புகளைத் தொகு

சிங்கேட்டு (zincate) என்ற சொல் வேதியியலில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஒன்றை குறிக்கலாம்.

  • டெட்ரா ஐதராக்சோசிங்கேட்டு Zn(OH)42− அயனியைக் கொண்டுள்ள ஓர் உப்பு என்றோ, துத்தநாகத்தைக் கொண்டுள்ள கால்சியம் சிங்கேட்டு CaZn(OH)4.2H2O [1] அல்லது சோடியம் சிங்கேட்டு Na2Zn(OH)4]][2] தாது என்றோ கூறலாம். NaZn(OH)3• H2O சேர்மத்தில் உள்ள ஒரு பல்லுருவ எதிர்மின் அயனி [Zn(OH)3] என்றும் கூறலாம்[3] .
  • துத்தநாகம் அல்லது துத்தநாக ஐதராக்சைடு அல்லது துத்தநாக ஆக்சைடு போன்றவற்றை கரைத்து தயாரித்த ஒரு காரக் கரைசல் என்று கருதலாம். Zn(OH)42− போன்ற பல்வேறு எதிர்மின் அயனி இனங்கள் இவற்றில் உள்ளன. மின்முலாம் பூசும் தொழிலில் இத்தகைய கரைசல்கள் பயன்படுகின்றன.
  • துத்தநாகத்தைப் பெற்றுள்ள ஓர் ஆக்சைடு என்றும் Na2ZnO2 போன்ற குறைவு மின்னெதிர் தனிமம் என்றும் கருதலாம்.
  • துத்தநாக சல்பேட்டு என்ற துத்தநாக குறை நிரப்பியாக கிடைக்கும் ஒரு வர்த்தகப் பொருளாகவும் இதைக் கருதலாம்[4].

மின்முலாம் பூசலில் சிங்கேட்டு

அலுமினியத்திற்கு நிக்கல் முலாம் பூசுவதற்கு முன்னரான தொடக்கநிலை துத்தநாக மேற்பூச்சு முலாமாகப் பூசும் மூழ்கல் செயல்முறையில் இக்காரக் கரைசல் பயன்படுகிறது. இச்செயல்முறை ஒரு மின்முலாம் பூசும் செயல்முறையல்ல. சிங்கேட்டிலுள்ள துத்தநாகத்தை அலுமினியத்தால் இடப்பெயர்ச்சி செய்யும் செயல்முறையாகும் :[5].

3 Zn(OH)42− + 2 Al → 3 Zn + 2 Al(OH)4 + 4 OH

எஃகை துத்தநாகத்தால் மின்முலாமாகப் பூசும் காரக் கரைசல் என்றும் இதைக் குறிப்பிடலாம்[6]

கனிம வேதியியல் பெயரிடுதல்

கனிமவேதியியல் சேர்மங்களின் பெயரீட்டு முறையில் சிங்கேட்டு என்ற சொல் ஒரு பின்னொட்டாக பயன்படுகிறது. மைய துத்தநாக அணுவைக் கொண்டுள்ள பல்லணு அயனி அச்சேர்மத்தில் உள்ளது என்பதை இப்பின்னொட்டு வெளிப்படுத்துகிறது. டெட்ராகுளோரோசிங்கேட்டு (ZnCl42−), டெட்ரா ஐதராக்சோசிங்கேட்டு (Zn(OH)42−), டெட்ராநைட்ரேட்டோசிங்கேட்டு (Zn(NO3) உள்ளிட்டவை இதற்கு உதாரணங்களாகும். முறையே டெட்ராகுளோரிடோசிங்கேட்டு மற்றும் டெட்ரா ஐதராக்சிடோசிங்கேட்டு என்று அழைக்கப்படும் முதலிரண்டு அயனிகளும் பரவலான பயன்பாட்டில் இல்லை என 2005 ஆம் ஆண்டு பரிந்துரைகள் பல தெரிவிக்கின்றன.

சிங்கேட்டின் நீரிய வேதியியல்

ZnO அல்லது Zn(OH)2 காரக் கரைசலில் அயனி இனமான Zn(OH)42−. அயனி உள்ளதென பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது [7].முன்னதாக ராமன் ஆய்வுகளில் நேரியல் ZnO22− அயனிகள் இருப்பதாகக் கூறப்பட்டது [8].

மேற்கோள்கள்

  1. {{cite journal | doi = 10.1149/1.2108376 | title = Physico-Chemical Properties of Calcium Zincate | year = 1986 | author = Sharma, Ram A. | journal = Journal of the Electrochemical Society | volume = 133 | pages = 2215 | issue = 11
  2. Stahl, R.; Niewa, R.; Jacobs, H. (1999). "Synthese und Kristallstruktur von Na2Zn(OH)4". Zeitschrift für anorganische und allgemeine Chemie 625: 48. doi:10.1002/(SICI)1521-3749(199901)625:1<48::AID-ZAAC48>3.0.CO;2-L. 
  3. R. Stahl; H. Jacobs (1998). "Synthese und Kristallstruktur von NaZn(OH)3• H2O und NaZn(OH)3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 624 (1): 25–29. doi:10.1002/(SICI)1521-3749(199801)624:1<25::AID-ZAAC25>3.0.CO;2-8. 
  4. D. Trinschek; M. Jansen (1996). "Na2ZnO2, ein neues Natriumzinkat". Z. Naturforsch. 51 b: 711–4. 
  5. Glenn O. Mallory, Juan B. Hajdu (1990), Electroless Plating: Fundamentals and Applications, American Electroplaters and Surface Finishers Society, , William Andrew Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-936569-07-7
  6. Porter, Frank C. (1991). Zinc Handbook. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-8340-2. https://books.google.com/?id=laACw9i0D_wC. 
  7. Kaumudi I. Pandya; Andrea E. Russell; J. Mc Breen; W. E. O' Grady (1995). "EXAFS Investigations of Zn(II) in Concentrated Aqueous Hydroxide Solutions". The Journal of Physical Chemistry 99 (31): 11967. doi:10.1021/j100031a026. 
  8. Sharma, Shiv Kumar (1973). "Raman study of aqueous zinc oxide-alkali metal hydroxide system". The Journal of Chemical Physics 58 (4): 1626. doi:10.1063/1.1679405. Bibcode: 1973JChPh..58.1626S.