Informatics Educational Institutions & Programs

பிரி புனல்
பிரி புனல். ஈதர் மேல்பகுதியிலும், நீர் கீழ்ப் பகுதியிலும் உள்ளது.

பிரி புனல் என்பது, ஒன்றுடன் ஒன்று முழுமையாகக் கலக்கும் இயல்பில்லாத, வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட இரண்டு நீர்மங்களில் கலவையிலிருந்து அவற்றைப் பிரிப்பதற்கான ஆய்வுகூடக் கருவியாகும். இது பொதுவாக போரோசிலிக்கேட்டுக் கண்ணாடியால் செய்யப்படுகின்றது.

பொதுவாக ஒரு நீர்மம் நீராக இருக்கும். மற்றது, ஈதர், குளோரோபாம் அல்லது எண்ணெய் போன்ற ஒரு கரிமக் கரைப்பானாக (organic solvent) இருக்கலாம். கூம்பொன்றின் மேல் அரைக்கோளம் ஒன்று கவிழ்க்கப்பட்டது போன்ற வடிவம் கொண்ட இதன், மேல்பகுதியில் ஒரு மூடியும், கீழ்ப்பகுதியில் stopcock ஒன்றும் இருக்கும்.

இரு நீர்மங்களின் கலவை, மேற்பகுதியிலுள்ள வாய்வழியாக புனலுள் ஊற்றப்படும். அடுத்துப் புனலைத் தலைகீழாகக் கவிழ்த்துக் குலுக்கப்படும். stopcock ஐத் திறந்து மேலதிகமாக இருக்ககூடிய அமுக்கத்தை விடுவித்தபின்னர், மீண்டும் அதனை மூடி நேரான நிலைக்குக் கொண்டுவந்து நீர்மங்கள் அடைய விடப்படும். அடர்த்தி கூடிய திரவம் கீழ்ப் பகுதியில் தங்க, அடர்த்தி குறைந்தது அதன்மேல் மிதக்கும். இன்நிலையில் கீழுள்ள stopcock ஐத் திறந்து கீழ்ப் பகுதியில் அடைந்துள்ள நீர்மத்தைத் தனியாக வெளியில் எடுக்க முடியும். இந் நீர்மம் முற்றாக வெளியேறியதும், மற்ற நீர்மத்தைத் தனியாக எடுக்கலாம்.